அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம் (2)
வசந்த காலத்தில் மழை தரும் மேகம்
அந்த மழை நீர்ருந்த மனதில் மோகம்
இசையெனும் அமுதனில் அவளொரு பாகம்
இந்திரலோகத்துச் சக்கர வாகம்
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவியம் யாகம்
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம்.... அது என் யோகம்
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவர் ஒரு பைரவி... அவள் ஒரு பைரவி... அவள் ஒரு பைரவவி
(அதிசய)
No comments:
Post a Comment