Google

Thursday, September 6, 2007

சஹாரா பூக்கள்

பாடல் : சஹாரா பூக்கள்
எழுதியவர் : வைரமுத்து
இசை : ஏ.ஆர. ரஹ்மான்

ஆண் : சஹானா சாரல் தூவுதோ ?
சஹாரா பூக்கள் பூத்ததோ ? (2)

பெண் : சஹாரா பூக்கள் பூத்ததோ ?
சஹானா சாரல் தூவுதோ ?

ஆண் : என் விண்வெளி
தலைக்கு மேல் திறந்ததோ?
அடடா !
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ !
அது என்னுடன் தேநீர் கொண்டதோ !

பெண் : கனவோ ? நிஜமோ ?
காதல் மந்திரமோ ?

ஆண் : ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூராயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது....
(சஹானா)

பெண் : தலைமுதல் கால்வரை
தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு

உன்.....
மீசையின் முடியென்ற
மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு...

ஆண் : பூமிக்கும் வானுக்கும்
விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிரப்படுமா?

பூக்களின் சாலையில்
பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா?

(சஹானா)

No comments: